காதல்

புதிதாய் தெரிகிறாய்
என்னுள் புதைந்திருந்த
உனக்கான ஏக்கம்
அறிந்தபின்...

உயிர் வாழ்கிறாய்
எனக்குள் உணர்வுகளை
தாண்டிய தாக்கம்
தெரிந்தபின்...

சுமைகள் சுகமானது
உன்னோடு பகிர்ந்த
காதல் மனதோடு
உறவாடியதால்....

பாலைவனங்களும்
பசுமையாக தோன்றியது
இரு காதல் மனங்களின்
சேர்க்கையால்...

என் எழுத்துக்களும்
உன்மேல் காதல் கொள்கிறது
நான் கொண்ட காதலை
பகிர்ந்தபோது...

எண்ணங்களின் சேர்க்கை
எழுத்துக்களின் கோர்வை
சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை என்னிடம்…

என் அறையின்
சுவறுகள் உன் நிழல்படம்
கேட்கிறது அவைகளை
அலங்கரித்துக்கொள்ள…

நிமிடங்களை நகர்த்துகிறேன்
நொடிகளை எண்ணிக்கொண்டே
நம் காதல்மொழி பேசும்
பொன்னான நாளுக்காக…

எழுதியவர் : சிவா (17-Aug-14, 3:06 am)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே