இறை

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
அத்தனை கோடி துன்பம் வைத்தாய்
வாழ்வதற்கேற்ப வையம் வைத்தாய்
அவ்வைத்தினுட் நற்பாடம் வைத்தாய்

தேகம் சுவைக்கும் இன்பம் வைத்தாய்
தேகம் தாக்கும் துன்பமேன் வைத்தாய்
தாகமென்னும் ஆழம் வைத்தாய்
போதுமென்னும் திகட்டும் வைத்தாய்

ஆறாம் அறிவினை ஏன்மெக்களித்தாய்
சிந்தனைச் சிதறலில் வாட்டிடவைத்தாய்
இதுதான் உன்தன் விளையாட்டென்றால்
நீ ஏன் எமக்கு இறையென்று வந்தாய்

எழுதியவர் : ரமணி (17-Aug-14, 6:23 pm)
சேர்த்தது : ரமணி
Tanglish : irai
பார்வை : 52

மேலே