வண்ணத்துப் பூச்சி வானத்தில் கவிதை

சின்னச் சிறகு விரித்து
ஒரு வண்ணத்துப் பூச்சி
மலர் மலராய்
தாவிப் பறக்கிறது !
சித்திரத் தோட்டத்து
வண்ணமலர்கள்
சின்னத் தோழியின் ஆடலைப் பார்த்து
தலையாட்டிச் சிரிக்கிறது !
வண்ணம் கலையாத
ஒரு வானவில் அங்கே
இதை
வானத்தின் நீலத்தில்
கவிதையாய் வரைகிறது !
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Aug-14, 10:21 pm)
பார்வை : 91

மேலே