ஒதுக்கீடின்றி வாழ வழியுமுண்டோ
சந்திரனில் கொடியுயர்த்தி செவ்வாக்கு கலம் அனுப்பி
அண்டையரும் அந்நியரும் வியக்கும் பல விந்தை செய்து
பலதுறையில் வல்லுனர்கள் நாட்டிற்க்கு பெருமை சேர்த்தும்
மனக்குறை ஒன்றெனக்குண்டு பிழைக்க புறம் செல்வது ஏன்?
நன்கு படித்தும் பல்கலைக்கழகத்தில் சேர வழியில்லை
பட்டம் பெற்றும் அரசு ஊழியனாக முடியவில்லை
பார்பனரும் மள்ளர் பறையரும் ஒதுக்கீடின்றி - தாய்நாட்டில்
ஒருங்கே வாழ வையகத்தில் வழியுமுண்டோ?