காதலிக்கிறேன் உன்னை
..."" காதலிக்கிறேன் உன்னை ""...
என் பக்கமே வந்து வெக்கம் நீ தந்து
அருகில் அமர்ந்து அமைதியை அளித்து
அன்பை பொழிந்து ஆட்சியை பிடித்து
துக்கங்கள் அழித்து தூக்கம் கொடுத்து
மாரினில் புதைந்து கனவில் நுழைந்து,,,
வலிகள் மறைத்து வழிகள் அமைத்து
பாசத்தை பகிர்ந்து நேசத்தில் திளைத்து
பார்வையில் படர்ந்து பக்கமே அமர்ந்து
கணைகள் தொடுத்து காதல் படைத்து
தமிழினில் அமிழ்ந்து கவிதை எடுத்து,,,
மெல் சிறகினை விரித்து உயர பறந்து
ஜதிகள் பாடியே அலையாய் அலைந்து
உணர்வில் கலந்து உயிரினில் கரைந்து
கண் விழிகள் நீரில் மூழ்கியே குளிக்க
சிந்தையில் மலர்ந்த என் செந்தாமரையே,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...