மீண்டும் ஒரு முறை காதலி

மீண்டும் ஒரு முறை காதலி !


எட்டு கண்களில்
வழிந்த காதல்
நான்கு கண்களுக்குள்
வற்றியதே !


நான் அவளோடும்
நீ அவனோடும்
பாசத்தை பகிர்ந்ததை
கொண்டதை விட
காயம் செய்ததே அதிகம் !


விபத்தாய் நேர்ந்த
அவரவர் காதல்
ஒரு விபத்தாக
முறியட்டும் !


சுதந்திரம் கிட்டியது
என்று எண்ணிக்கொண்டு
காதலுக்குள்ள
நம்மை நாம்
சிறை வைத்துக்கொண்டோம் !


காதல்
வாழ்வியல் அனுபவங்களை
கற்றுத்தரும்
பாடசாலை !


நான் பெரியவன்
நீ பெரியவள்
என்ற அகந்தை
விட்டு விலகி
காதல் செய்வோம் வா !


காயம்பட்ட
நெஞ்சத்திற்கு
புதுக்காதல்
கொண்டு களிம்பு
தடவுவோம் வா !


என்னை உன்னுளும்
உன்னை என்னுளும்
புதைத்து
புதுக்காதல் புரிவோம் வா !





- பா. விக்னேஷ்.

எழுதியவர் : பா. விக்னேஷ் (19-Aug-14, 6:42 pm)
பார்வை : 205

மேலே