போடா என்று சொல்வாயா--குமரி
பலமுறை பார்த்தேன் ஒருமுறை பார்த்தாய்
சரணம் ஆனேன் முன்னாலே...!
ஒருவிழி கண்டேன் அதிலொளி கண்டேன்
கரணம் அடித்தேன் உன்னாலே..!
துறந்தேன் துயிலை மறந்தேன் உணவை
பிறந்தேன் புதிதாய் தன்னாலே....!
பார்க்க துணிந்து தோல்வியில் துடித்து
பாரில்(BAR) தவித்தேன் பின்னாலே..!
பாடம் படித்து பட்டம் பெற்று
பணியில் தொடர சொன்னாரே...!
சொன்னவர் கனவு பகலாய் மாறி
காற்றில் பறந்தது என்னாலே..!
வருவாய் என்று பலமுறை தவித்து
உருவாய் தெருமுனை நிற்கின்றேன்...!
வருவாய் திறப்பாய் ஒருமுறை செவ்வாய்
சொல்வாய் “போடா” செல்வாயே..!
(நான் உன்னை மறந்து உருபடுவதற்காக)