எண்ணமே எல்லாமே
குருவிகள் கூட்டிலே
குடும்பமாய் காட்டிலே
குயிலுக்கு கூடின்றி
குடும்ப வாரிசோ
காக்கையின் வீட்டிலே
தான் இனமறியா காக்கையும்
காக்குது குயிலையும்
குஞ்சுகள் பொரித்தது
குயிலுக்கும் உணவளித்தது
ஊமையாய் இருந்திருந்தால்
உயிராவது மிஞ்சிருக்கும்
உயர்வான குரலென எண்ணி
குயிலும் குரல் உயர்த்தி கூவிட
காக்கையும் அதிர்ச்சியில்
ஆத்திரம் தாளாது
குஞ்சென்றும் பாராமல்
கொத்தியே விரட்டிட
குற்றுயிர் கொலையுயிர்
செத்து விழுந்தது மண்ணிலே
பல மனிதர்கள் இதுபோலே
வளரும் இடம் அறியாமல்
அனைத்தும் அறிந்தவர் போல்
ஏதும் அறியாமலே ...
எண்ணுகிற எண்ணமே
வாழ்வென்பது இறுதியில்
இக்கட்டு நிகழ்கையில்
உணர்ந்தென்ன ஆகும் ?