காதல் - இராஜ்குமார்

அறையில் திரியும் இரவினை
விழியில் ரசிக்கும் விசித்திரம் - காதல்
நுரையில் வழியும் வெண்மையை
நுகர்ந்து சிலிர்க்கும் தனித்திறம் - காதல்

உள்ளத்தில் உலவும் உருவத்தை
உருட்டி மிரட்டும் கொடூரம் - காதல்
கன்னத்தில் வீழ்ந்த குழியை
புதையலாய் நினைக்கும் மூளை - காதல்

சிலையை செதுக்கும் உளியை
எளிதில் எறியும் ஏமாளி - காதல்
உயிரை வருடும் கவியை
படிக்க துடிக்கும் இதயம் - காதல்

விளிப்பில் உள்ள விதைகளை
விற்று பார்க்கும் விளையாட்டு - காதல்
கிழக்கில் உதித்த சூரியனை
உதைத்து திட்டும் தெனாவட்டு - காதல்

மனதை கிழிக்கும் வார்த்தையை
அன்பில் மறக்கும் குழந்தை - காதல்
இதழில் தெறிக்கும் புன்னகையில்
வாழ்ந்து மடியும் மனிதம் - காதல்

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (20-Aug-14, 4:19 am)
பார்வை : 416

மேலே