எடுத்துச் செல் - இராஜ்குமார்

எண்ணம் எல்லாம்
எழுத்தில் புதைத்து
காதலை எல்லாம்
கவியில் பதித்தேன் !!

வாழ்க்கை ஒன்றை
வரிகளில் வைத்து
விருப்பம் சொல்ல
விரும்பி வந்தேன் ..!

இதயம் ஒன்றில்
முழுதும் உறைந்து
கண்கள் பார்த்தே
காதல் சென்னேன் ..!!

நிமிடம் ஒன்று
நிற்கும் முன்

கன்னம் ஒன்றை
காலணி ஒன்றால்
காயம் செய்த காதலியே ..!!

கன்னத்தை கட்டிவைத்து
வீங்கும் வரை
விரட்டி அடித்தாலும்

வீங்கிய கன்னத்தை
விளையாட தருவேன்

எடுத்துச் செல்ல
எப்போது வருவாய் ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (20-Aug-14, 4:16 am)
பார்வை : 685

மேலே