சேர்க்கையின் கவிதை

சற்று நீண்ட
பச்சைவண்ணச் இலைபெற்ற
அந்தச் செடியில்
மலர்ந்திருக்கும்
மஞ்சள் மலரின் பெயர்
எனக்குத் தெரிய வாய்ப்பில்லை
மாலை நேரத்தை
மேற்குதிசை மடிந்து சொல்லும்
அதன் சூல்களில்
சேர்க்கை செய்யும்
வௌ்ளை வண்ணத்துப்பூச்சொன்று
நொடிக்கொரு கவிதையொன்றை
பாடி படபடத்தது
தன் வௌ்ளைவண்ணச் சிறகை....

எழுதியவர் : பாவூர் பாண்டி (20-Aug-14, 12:28 am)
பார்வை : 128

மேலே