உன் பெயர் சொல்வேன் என்னவள் என்று 555

பிரியமானவளே...


தென்றல் இல்லாத
வாழ்க்கையில்...

தென்றலாய் வந்தவளே...

உன் வசந்ததால் மீண்டும்
உயிர்த்தெழுகின்றேன்...

உறவுகள் என்னோடு
இருந்தாலும்...

தனிமையைத்தான்
நான் உணர்கிறேன்...

என் உறவு நீதான் என்று
உணர்வுகள் சொல்கிறது...

யாருக்கும் பணியாத
என் உள்ளம்...

உன் பார்வை ஒன்றிலே
பணிந்ததடி...

கனவுகள் இன்றி
வாழ்ந்தேன்...

நேற்று கனவாக
வந்தாய்...

இன்று நிஜமாக
வந்தாய்...

இரவு நேரத்திலும்
சருகாய் காய்ந்தேன்...

கோடை வெயிலிலும்
பனியாக வந்தாய்...

உன் அன்பில்
குளிர்ந்தேன்...

உறவோடு உயிராய்
இணைந்தேன்...

என்றும் மாறாது
என் எண்ணம்...

யார் தடுத்தாலும் போகாது
உன் மீதான பாசம்...

என்னை வெறுத்து
நீ சென்றாலும்...

உன் நிழலாக
வருவேன்...

என்னவள் நீ என்று
உன் பெயர் சொல்வேன்...

நீ பறித்த
வேப்பிலையும் தேனாக...

இந்த காகிதமும் உன் பக்கத்தில்
வந்தால் கவிதையாகும்...

என் வாழ்வும்
வசந்தமாகும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Aug-14, 4:37 pm)
பார்வை : 222

மேலே