குழந்தையின் வீடு
குழந்தையின் வீடு !
பச்சை நிறத்தில்
மலை !
மலை முகட்டில்
சிவப்பு சூரியன் !
மலைச்சரிவில்
தீப்பெட்டி அளவில்
சிறிய வீடு !
வீட்டின் அருகே
தென்னை மரம் !
தென்னை மரநிழலில்
பசுமாடு !
என நாமறியாத
இயற்கை குறித்து
வருகிறது
நகரத்து குழந்தை !