பிரிவும் நட்பும்

பிரிவு
எத்தனை விசித்திரமானது.
தாயின் தொப்புள் கொடி
அறுத்ததில் தொடக்கம்.
கடை மூச்சு நிற்கும்
வரை தொடரும்.
என்றும் பிரிவும் நட்பும்
சக்தியும் சிவனும் போல்;
பிரிக்க முடியாதது.
இலையுதிர் காலப் பிரிவே
புது வசந்தகால நட்பின்
ஆரம்பித்திற்க்குத்தான்.
நாம் காலச் சுழற்சியால்
காணாமல் போகலாம்,
மனச் சுமையால்
மயங்கிப் போகலாம்,
வேலை காரணமாய்
வேறிடமும் போகலாம்;
நம் நட்பின் நினைவலைகள்
என்றுமே நம்முள்
ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கும்.

எழுதியவர் : அபர்ணாசெங்கு (21-Aug-14, 11:33 am)
சேர்த்தது : அபர்ணா
Tanglish : pirivum natbum
பார்வை : 201

மேலே