தோழமைக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து

இந்த நாள் ..........

மிக இனிய நாள் ........

என் பிரியமான தோழியே ....

நீ இன்று பிறந்ததால் ....

இந்த நாள் மிக இனிய நாள் ......

எத்தனையோ தோழமைகள் என்னில் உண்டு

என்றாலும் அவையெல்லாம் உன் போல் இல்லை

இடைவெளி அதிகம் தான் நம்மில் .......

இல்லை .......... இல்லை .... ........

நம் நட்பிற்கு தூரங்கள் ஒரு தடையே இல்லை

குறிஞ்சி மலர் பெருமை சொல்ல வார்த்தை இல்லை....

என் இனிய தோழியே நீயே நட்பின் எல்லை .....

காலத்தின் கட்டாயத்தால் தொலைந்து போனோம்

ஆளுக்கொரு திசையாய் ... என்றாலும்

காலத்தால் அழியாத சித்திரமாய்

தொடர்கிறது நம் நட்பு மட்டும்

தொலையாமல் பத்திரமாய் .........

என் பிரியமான தோழியே ...

வானவில்லின் நிறமாக ......

நீ கண்ட .......

கனவெல்லாம் நினைவாக ....

கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன் ...

எந்நாளும் புன்னகையும் பொன் நகையும் .....

உன்னோடே இருக்கட்டும் .....

நலமும் வளமும் என்றும் உந்தன்

நட்பினிலே தொடரட்டும் ....

வாழ்த்து சொல்ல வந்தேன் உனக்கு.....

இனியொரு பிறவியிலும்

நீயே என் தோழமையாய் தொடர்ந்திட வேண்டும்

என்று இறைவனை வேண்டி ......

வாழ்த்து சொல்ல வந்தேன் உனக்கு.....

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .....

என்றுன் நட்புடன் ....

உன் அன்புத்தோழன் ...

எழுதியவர் : கலைச்சரண் (21-Aug-14, 8:59 pm)
பார்வை : 266

மேலே