dreams

கண்கள் திறக்கும் முன் திறக்கும்..
கைகள் நம்மை தூக்கையில் பிறக்கும்..
மூச்சு விட தொடங்கும் போழுதே
ஆட்சி செய்ய தொடங்கும்..
முயற்ச்சி செய்ய தொடங்கினால்
உயர்வு ஒன்றையே தரும்..
தவழ்கையில் நடக்க சொல்லும்..
நடக்கையில் பறக்க தோன்றும்..
வகுப்பறையில் பிறரை உற்று
பார்க்க முயலும்..
இவர்கள் போல் ஏன் நான் இல்லை
என்று கேள்வி விழையும்..
ரோட்டில் பலர் நம்மை கடக்கையில்
அவர்கள் கனவுகள் தோன்றி மறையும்..
நாட்டில் பலர் இருந்தும்
இதில் நாம் யார் என்ற கேள்வி ஒலிக்கும்..
மேடையில் நிற்கையில்
நடிகன் ஆகலாமா?
தாளங்கள் போடுகையில்
இசை அமைத்திடலாமா?
மேலங்களுக்கு ஆடுகையில்
நடனம் புரிந்திடலாமா?
பேனாவை பிடிக்கையில்
கவிஞன் ஆகிவிடலாமா?
மோனாவை பார்கையில்
ஓவியன் ஆகிவிடலாமா?
உயிரை காக்கையில்
மருத்துவர் ஆகிவிடலாமா?
உதவ கைகள் நீல்கையில்
அரசியலில் சேரலாமா?
பொய்கள் புன்னகையை காக்கையில்
கதைகள் இயற்றலாமா?
புதிய பொருள் பிறக்கையில்
பொறியாளர் ஆகலாமா?
போதிய அறிவு இருக்கையில்
விஞ்ஞானி ஆகலாமா?
ஜோதி ஒளியில் கலக்கையில்
மெய்ஞானி ஆகலாமா?
சாதி என்பதை ஒழிக்கயில்
சரித்திரதில் வந்து விடலாமா?
கல்வி கண் திறக்கையில்
ஆசிரியர் ஆகலாமா?
கல்லில் இசை ஒலிகையில்
சிற்ப்பி ஆகலாமா?
பேச்சில் மனதை பிடிக்கையில்
பேச்சாளர் ஆகலாமா?
முச்சில் ஒருவன் இருக்கையில்
மனைவியாய் ஆகலாமா?
பேச்சில் மழலை தெளிகையில்
தாயாய் வாழ்ந்து விடலாமா?
கைகள் சேர்ந்து பிடிக்கையில்
காதல் செய்யலாமா?
கனவு அங்கு பிறக்கையில்
கணவன் ஆகலாமா?
காக்க முயல்கையில்
காவலன் ஆகலாமா?
தாக்க முயல்கையில்
தீவிரவாதம் செய்யலாமா?
தூக்கம் கலைகையில்
மீண்டும் கனவு காணலாமா?
இதை இயற்றயில்
உள்ளம் கவர்ந்து விடுமா?
இதை படிகையில்
மீண்டும் படிக்கலாமா?
கேள்வி ஆயிரம் பிறக்கையில்
விடைகள் சொல்ல யாரும் இல்லை..
உள்ளத்தை மீண்டும் மீண்டும் கேட்கையில்
உண்மையை அது சொல்லும்..
ஒருபடி மேல் சென்றவரை பார்க்கையில்
பொறாமை தீ தோன்றும்..
பொறுமை ஒன்றை சேர்கையில்
பெருமை வந்து சேரும்..
கனவை விடாமல் தொடர்கையில்
நிஜமாய் அது மாறும்..
கனவை தொலைத்து
கல்லரை சேர்ந்தால்..
மீண்டும் பிறந்தவுது
கனவை அடைய வேண்டும்..
என்ற கனவே நம் கனவாய் மாறும்..
கனவுகளுடன்……….