கிழித்து கிழித்து நீர் எறிவீர் - இராஜ்குமார்
காலை உறக்கத்தை நானே
கலைத்தாலும் இமை மூடியே
விரல் நீட்டி இதழ் சொல்லும்
"அஞ்சு நிமிஷம் " ண்ணா
உதைக்கும் உதையில்
நாலடியார் சொல்லும்
நாற்காலி ஒன்றிக்கு
நமது எட்டு கால்களே
எமானாகிப் போனது ..!!
பாடல் செய்த பாவமோ
எட்டு கண்ணினும் பதியாமல்
நமது நான்கு கையில்
நடனமாடுகிறது கைக்கோள் ..!!
காலையில் கட்டில் மேல் - என்
கனவில்லா குட்டி தூக்கம்
கை நழுவும் கைபேசியை
யார் கையோ தூக்கும் ..!!
ஆசை ஒன்றை
தோசையில் அடுக்கி
தட்டு ஒன்றை
தடம் புரள செய்வீர் ..!!
அஞ்சு ரூபா இனிப்பிற்கு
அழுக்கில் வாழ்ந்த ஆடைகளை
அடித்து துவைத்து பாலைப்போல
வெளுக்க வைத்தீர் ..!!
ரசித்து ரசித்து நான் எழுத
கிழித்து கிழித்து நீர் எறிவீர் ..!!
கலங்கி கலங்கி நான் போக
குலுங்கி குலுங்கி நாம் சிரிப்போம் ..!!
- இராஜ்குமார்
=====================================
கைக்கோள் - Remote