தொ ல் லை பேசி -நாகூர் லெத்தீப்

பாசத்தை
பரிவுடனே விசாரிக்கும்
சந்தர்ப்பம் தொலைவாக
இருந்தாலும்......!

சந்தோசம்
பொங்கிடும்
மகிழ்ச்சிகள்
பெருகிடும்எத்தனை
முறை பேசினாலும்.........!

சோகங்கள்
விளைந்தாலும்
மன வேதனைகள்
சுமந்தாலும்
உனது பிரிவில்லை
என்றுமே.........!

எனது
அருகிலே
என்றுமே
வாழ்வது எனது
தனிமையை
நீக்குவது நீதானே
நிஜம்தானே..........!

தாமதம்
உனக்கில்லை
என்னிடம் நீ இருக்க
கவலையில்லை
பேசுகிறேன்
பேசுகிறேன்........!

தொ (ல்) லை
பேசி நீதானே
சிலபேர் சொல்கிறார்கள்
பிறகு ஏன் உன்னை
சுமக்கிறார்கள்
புரியாமல்
அனுதினமும்..........!

காதல் இல்லாத
உறவு - நட்பு இல்லாத
உயர்வு -பாசம் இல்லாத
பிணைப்பு - பேசுகிறேன்
பேசுகிறேன்.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (22-Aug-14, 5:02 pm)
பார்வை : 138

மேலே