அம்மா -உன் பாசமே என் தேசம்
விண்ணில் இருந்து இறங்கி வந்து
மண்ணில் உத்திதவளே ...
கண்ணில் வைத்து என்னை காத்தவளே
தன்னில் ஒருத்தியாய் என்னை நினைத்தவளே ...
எண்ணில் அடங்கா அன்பை என்மேல் வைத்தவளே
என்னில் உன் உருவத்தை பதித்தவளே.....
இதயத்தை திருடி -என்
வாழ்வில் உதயமாய் வந்தவளே ...
எதையும் எதிர்பாராமல்
சகலதையும் வென்றவளே ...
கள்ளமில்லா உன் மனதில்
வெள்ளமாய் என் மேல் பாசம் வைத்தவளே ...
பள்ளமுள்ள உன் வாழ்வில்
மெல்ல மெல்ல என்னை கொண்டு சென்றவளே ...
சின்ன சின்ன உன் கனவுகளை கலைத்து
வண்ண வண்ண திரைப்படங்கள் காட்டியவளே...
எண்ண எண்ண கலையாத உன் நினைவுகளை
சில்லு சில்லாய் கரைகிறேனே..
வயிற்றில் என்னை சுமந்து -கயிற்றில்
என்னை தொடுத்தாய் தொப்புள் கொடியாய்...
வலிகளைத்தாங்கி
விழிகள் முடி ..
துளிகள் (கண்ணீர்)விட்டு
விளைந்த பயிர் நான் அம்மா ..
உன் அன்பிற்கு நான் அடிமையல்ல
அகதி ...............