என் அம்மாவுக்கான என் முதல் பாடல்
அம்மான்னு சொன்னாலே
ஆகாசம் வணங்கும்
அம்மா நீ சொன்னாலே
தீ கூட சிரிக்கும்
உன் பாசம் அது போதும்
நான் வாழும் வரைக்கும்
உன் ஆராரோ கேட்டுத்தான்
சூரியனும் உறங்கும்
பூமியில நீ இருந்தா
சாமி இங்க தேவையில்ல.........!
காலத்துக்கும் நீ இருந்தா
கண்ணீருக்கு வேல இல்ல ........!
வானத்துல நிலவ காட்டி
ஊட்டிவிட்ட சாதம் ........!
நான் வாழும்வரை எப்பொழுதும்
வயிறு நெறஞ்சு போகும்........!
தூளியில நான் உறங்க
நீ படிச்ச கீதம் .......!
நான் ஆழியில மூழ்கும்போதும்
கேட்கும் உந்தன் நாதம் ..........!
உன் மடியில் வாழ்ந்திடும் சுகங்களை
தந்திடுமா வாழ்கின்ற யுகங்களே
உன் சேலை கொண்ட வாசம் ........!
அது நூலில் செஞ்ச பாசம் .........!
சோகத்துல நான் அழுது
துவண்டு விழுந்த போதும் .........!
உன் பாசத்துல கவலையெல்லாம்
எனக்கு மறந்து போகும்........!
நம்பிக்கை இல்லாம
நான் நடந்த போதும் .........!
நீ தோழியாய் மாறி வந்து
தோல் கொடுத்த தெய்வம் .........!
நீ சிரிக்க எப்பொழுதும் வாழ்ந்திருப்பேன் .........!
நீ அழுதால் அந்த நொடி போயிருப்பேன் .......!
அந்த வானில் நிலவு இருக்கு
அது உன் மனச விட அழுக்கு ............