பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று
மலர்ந்த மலர்களெல்லாம்
பனித்துளிகளின்
குற்றாலத்தில்
குளித்து மகிழ்கின்றனா....!

தேனீக்கள்
மலர்களோடு
கிசுகிசுத்துக்கொண்டன
அன்பே
இன்று ...உனக்கு
பிறந்த நாளாமே ...?

பூக்களின் இளவரசிக்கு
வாழ்த்துக்கள் பாட
அதிகாலையிலேயே
விழித்துக்கொண்டன மலர்கள் ...!

நந்தவனத்தில்
நீ
நடந்து வருகையில்
தென்றலின் சங்கீதத்தோடு
வாழ்த்துக்கூர
போட்டிபோடுகின்றன
மலர்களோடு என் உதடுகளும்........!

அன்பே ..உன்
காதுமடலோரம்
குடியேறி ...உன்
முக தரிசனம் காண
தவமிருக்கின்றனவாமே
நீ
சூடியுள்ள
மல்லிகை மொட்டுக்கள் ...?

வாடா மலருக்கு
முத்தமிட்டு
சொர்க்கத்தின்
கதவுகளை தட்டின
நீ - வைத்துள்ள ரோஜாக்கள் ....!

உன் கூந்தலில்
குடியேறிய - வாலிப
மல்லிகை மொக்குகள்
இதழ் விரித்து
வயசுக்கு வந்தன
உன் பருவச்சூட்டால்....!

நந்தவன தேவதைக்கு
இன்று
பிறந்த நாளென்று
பூக்கள் எல்லாம்
புன்னகைத்து மகிழ்கின்றன ....!

எழுதியவர் : வெற்றிநாயகன் (22-Aug-14, 10:20 pm)
பார்வை : 151

மேலே