பரிணமிக்கும் பந்தம்
நிலம் பார்த்து விதை
போ ட்ட நான் தினம்
பார்ப்பேன் விளைச்சலை
உரமிட்டு நெற்றி வியர்வை
சிந்தவே தோள் மேல்
இருந்த துண்டை எடுத்து
ஒத்திய வண்ணம் வந்து
அமர்ந்தேன் ஒதிகை
மரநிழலில்
ஓடை நீரும் சல சல
என்று ஓட வாடைக்காற்றும் மெதுவாக
மோத இதமாய் இருந்தது
உடலுக்கு சுகமாம் குட்டித்தூக்கம் போட்டெழுந்தேன்
கொசுவம் தொடுத்த சேலை
கட்டி மாதுளங் கொண்டை
போட்டு தேனோடு மல்லிகை
மலர் முடித்து மஞ்சள் போட்ட
முகத்தில் வட்ட நிலவாட்டம்
குங்குமப் பொட்டு வைத்து
வாய் மலர்ந்த புன்னகையுடன்
வந்தமர்ந்தாள் என் சிங்காரி
கட்டியாகக் காய்ச்சிய கேழ்வரகு
மாக்கூழும் கம கமக்கும்
கருவாட்டுக் கொழம்பும்
வெயிலுக்கு இதமாய்
பச்சைமிளகாய் போட்ட மோரும்
கொண்டு வந்து வெட்கத்துடன்
அமர்ந்தாள் என் புது மணப்பொண்டாட்டி
மெதுவாகச் சிரித்தாள்
பதமாகப் பரிமாறினாள்
கொஞ்சம் பயம் கலந்த
பாசத்துடன் நான் அள்ளி
சுவைத்தேன் பசி பாதி
ஆசை மீதி அவளைச் ரசித்த
படியே சுவைத்தேன்
அவள் தன் தலையை
குனிந்த படியே
அமர்ந்திருந்தாள் அடக்கம்
பெண்ணுக்கு தேவையடி
ஆனாலும் நாம் இருவர்
தனியே இருக்கையில்
தேவையோடி சிங்காரி என்று
நான் சிரிக்க அவள் முகம்
சிவக்க இதை ரகசியமாய்
இயற்கையும் ரசிக்க என்
உடல் சோர்வும் போனது
மெதுவாய் உள்ளம் இன்பம்
கண்டது சுகமாய்.....!!