பிளாட்பாரத்தில் கார்
இங்கிலாந்தின் Coventry என்ற ஊரில் கண் பார்வையில்லாத ஒரு பெண்மணி,
Kay Kitto, a volunteer for Guide Dogs UK, உதவும் நாய் Jackie யின் துணையுடனும்,
கணவர் Nigel லுடனும் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பிளாட்பாரம் மீது ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த navy blue Jaguar XJL
காரினால் அவர் பிளாட்பாரம் மீது செல்ல முடியாமல் ரோட்டோரத் தடுப்பைத்
தாண்டி ரோட்டில் இறங்கி நடக்க வேண்டி வந்தது. கார் பிளாட்பாரம் மீது
ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததை Nigel புகைப்படம் எடுத்து twitter ரிலும், Facebook கிலும்
போட்டார்.
கார் பிளாட்பாரம் மீது ஏற்றி நிறுத்தப்பட்டிருந்தது சகித்துக் கொள்ள முடியாததென்றும்,
காரின் உரிமையாளர் யாரென்றும், நடைபாதையை விட்டு ரோட்டில் நடந்த பொழுது
சைக்கிளில் சென்றவர் எங்கள் மீது இடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டது என்றும் twitter
ரில் தெரிவித்திருந்தார்.
கார் Lord Mayor ருடையது என்றறிந்த பிறர் அதிர்ச்சி அடைந்தனர். 63 வயதான
Lord Mayor Councillor, Hazel Noonan இந்த நிகழ்வுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக்
கொண்டார்.
அடாவடிகளுக்குப் பேர் போன நம்மூரில் இதற்கெல்லாம் தீர்வுண்டா? பிளாட்பார
ஆக்கிரமிப்புகளை நீக்கி, நடப்பவர்கள் ஆபத்தின்றிச் செல்ல முடியுமா?
இங்கு நான் இருக்கும் இடத்தில் பிளாட்பாரத்தில் ஒரு இடத்தில் சிறிதளவு வேலை
நடந்து கொண்டிருந்தது. இடையூறுக்கு வருத்தம் தெரிவித்து பலகை வைக்கப்பட்டிருந்தது.
மதுரையில் வருத்தம் தெரிவித்து பலகை வைக்க வேண்டுமென்றால் நூறு இடங்களிலாவது
வைக்க வேண்டியிருக்கும் அல்லவா!