கண்களின் வார்த்தைகளை ஆண்கள் அறிவதில்லை
காதல் பலிப்பதில்லை
பகல் கனவா தெரியவில்லை
கண்களின் வார்த்தைகளை
ஆண்கள் அறிவதில்லை
மனசு அழுவதெல்லாம்
வார்த்தைகளில் சொல்ல வில்லை
வாழ்க்கை வலிகள் என்றால்
வாழ்வதில் அர்த்தமில்லை
மீண்டும் காதலிக்க
மனங்கள் விரும்புவதில்லை
மனங்கள் விரும்பினால்
அதன்பேர் காதலில்லை