நீ காதலை மறுப்பது எப்போது

என் ஜீவனை ஏன் எடுத்தாய்
கண்களால் உயிர் பறித்தாய்
காரணம் நான் கேட்டால்
காதல் என பெயர் வைத்தாய்

அணு அணுவாய் ரசிக்க வைத்தாய்
கவிதைகள் புனைய வைத்தாய்
கவிஞன் ஆக்கி விட்டாய்
தனிமையில் உளறவைத்தாய்

சிரிப்பை பறித்துவிட்டாய்
என் நண்பனை பிரித்துவிட்டாய்
உறவுகளை மறக்க வைத்தாய்
உன்னைமட்டுமே நினைக்க வைத்தாய்

உயிரை வெறுக்க வைத்தாய்
உணர்வினை கெடுத்துவிட்டாய்
உண்மை காதலின்
உன்னதம் மறந்து விட்டாய்

காரணம் நான் கேட்டால்
கண்ணால் பேசிவிட்டாய்
உன் மௌனம் கொண்டு நோகடித்தாய்
காதலை வெறுக்க வைத்தாய்

காத்திருக்கிறேன் இப்போது
நீ காதலை மறுப்பது எப்போது ????

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:35 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 87

மேலே