கவிதைக்கு சொந்தக்காரர் - பழனிகுமார்

இலக்கணம் தெரியாது...
என்று ஒப்புகொண்ட உமக்கு..!
எப்படி தெரியும்..?
உம் கவிதை தமிழில் என்னை மூழ்கச்செய்ய மட்டும் ..!

சமுதாயத்தின் மீது காதல் கொண்ட உமக்கு..
முகவரியானது.. உம் கவிதை தமிழுக்கு..!

வியக்கிறேன் ஆச்சரியங்களுக்கு பின்..
உம் கவிதைகளின் அர்த்தங்களுக்கு..!

கவிதை வீதிகளில் உலா வராத நாட்களில்..
வருந்தும் உம் மனதிற்கு..
எப்படி சொல்லி புரியவைப்பேன்..?
உம் கவிதையை கொண்டு நான் உலா வருவதை..!

நான் நினைக்கிறேன்..
நீ கவிதை எழுதும்போது..!
என்னை முதலில் எழுதுங்கள் என்று..
வார்த்தைகள் முட்டி மோதிக்கொண்டு..
கூச்சலிடுவதுபோல..!

உம் கவிதை..
ஆயிரங்களை தாண்டிய அர்த்தங்கள் !
இரவுகளை தாண்டிய விடியல் !
ஆழங்களை தாண்டிய புதையல் !

உம் கவிதையை கொண்டு..
உம்மை பிடித்தது..!
உம் கவிதைக்கு பிறகு..
உம்மிடம் பிடித்தது..!
உமக்கு பிடித்த கவிதைகளுக்கு..
உம் வாழ்த்துகள் கவிதையாவது..!

உம் கவிதைகளை படித்த..
தோழர்களின் ஆசையாம்..
உம்மைப்போல் கவிதையை..
உருவாக்க வேண்டுமென்று..!

தினமும் நான் படிக்க நினைப்பது..
உம் கவிதையோடு உம்மையும் தான்...!

தமிழ் என்னைக்கொண்டு உம்மை வாழ்த்த நினைக்கிறது போல..
இந்த கவிதையின் மூலம்..!

என் விரல்கள் காத்திருக்கிறது தோழரே...
உம் விரல்களை கட்டியணைக்கும் தருங்களை எண்ணியபடியே..!

காதலோடு சொல்லுகிறேன்..
நீ கவிதைக்கு சொந்தக்காரர்...!

எழுதியவர் : சதுர்த்தி (26-Aug-14, 2:45 am)
பார்வை : 161

மேலே