அம்மா

------------------ அம்மா --------------------------

பெற்றெடுக்கும் போது ஏற்பட்ட
பெரும் வலியையும்
உடன் மறந்திடுவாய் என்
உயிர்உடல் பார்க்கையிலே
----------------------------------------------------------

உலகத்திற்க்கு முதல் பெண்
ஏவாளாம் எனில் - என்
உலகத்திற்க்கு முதல் ஏவாள்
நீ அல்லோ
-----------------------------------------------------------

கடித்த எறும்பு ஓட
பாவம் அறியா
அடுத்த எறும்பை கொன்று
அப் பாவம்தனையும் ஏற்று
என் அழுகை நிறுத்தி மகிழ்ந்தாய்
-----------------------------------------------------------

உன் வயற்றில் பசி இருக்க
என் வயற்று பசி போக்க
உன் உதிரம் பாலாக்கினாய்
என் உடம்பை ஆளாக்கினாய்
-----------------------------------------------------------

என் இருவிழிதன் உறங்க
உன் விழிஇருதனை திறந்து
நீ அறியா தாலாட்டினையும்
தாளம் சேர்த்து பாடிடுவாய்
-----------------------------------------------------------

கரும்சோகமெனும் மேகமுன்னை சூழையிலும்
குரலிழந்து வலுவிழந்து நீ அழுகையிலும்
மறைத்திடுவாய் பொய் சிரிப்புடனே
என் விழி உன் முகம் பார்க்கையிலே
-----------------------------------------------------------

உன் எழுத்தை முதல் எழுத்தாய்
கொண்டதினாலோ அம்மா
என் தமிழும் வான்னுயர
வளர்கின்றதோ அம்மா
-----------------------------------------------------------

ஒரு ஜன்மம் போதவில்லை
புகழ் பாடிடவே அம்மா
பல ஜன்மம் பாடிடுவேன் - உன்
புகழையே அம்மா
-----------------------------------------------------------

எழுதியவர் : ஷர்மா (26-Aug-14, 12:29 pm)
Tanglish : amma
பார்வை : 287

மேலே