அழகன வாழ்வுக்கு ஆனந்தமாய் போட்டி கவிதை

நல்லறம் இல்லறம்
இல்லறம் நல்லறமாக
உள்ளத்தை சுத்திகரி
வாழ்வை பண்படுத்து

இனம் ,மதம் ,மொழி
என்ற வேலிகளைத் தண்டி
மனம் எனும் தேசத்தில்
அன்பை விதைத்திடு

அது முளைப்பதற்கு -பண்பு,
கருணை எனும் பசளையிடு
பாசமழை பொழி
சினம் எனும் களை நீக்கு

அப்போதுதான் வசந்தம்
உன்னில் கைகோர்க்கும்
இவை ஆனந்தத்தின்
வாயில் ........

இனி ஜன்னல்கள் ......

இல்லாதை எண்ணி தவிப்பது
மடமை -இருப்பதை கொண்டு முடி
உன் கடமை -வாய்கள் இல்லையென
வருத்தப்பட்டதில்லை வண்ணத்துப்பூச்சிகள் ...

மன்னிக்கப் பழகு- இது
உன்னை மகானாக்கும் மார்க்கம்
பகைமை மற -காலமெல்லாம்
சுமக்கும் கற்பாறையை இறக்கிவைகிறாய் ....

பொறுமைக்கொள் -இது
கரையான்களையும் பறக்க வைக்கும் இறக்கை
நம்பிக்கையோடு உழை-இது உன்னை
தங்கிப் பிடிக்கும் தும்பிக்கை

எதிர் நீச்சலடி
நதிகளுக்கு எத்தனைத் தடைகள்
நதிகளின் தடை தாண்டலே நீர்வீழ்சி
இது நீருக்கு வீழ்சி இல்லை

உழைத்து உன் -அது
அறுசுவை கடந்து எழாம் சுவை
தேனும், பட்டும்
சிறு பூச்சிகளின் உழைப்பே ....

புலனடக்கம் கொள்
நீ மிருகங்களில் இருந்து வேறுபடுகிறாய்
எப்போதும் புன்னகை கொள்
பூக்களுக்கு நீ உறவினன்

வாழ்கை ஒரு பரிட்சை
வினைகள் இதன் பேறுகள்
வெற்றி நல்ல அனுபவம்
தோல்வி நல்ல படிப்பினை ......

யாரோ நாட்டிய மரங்களில்
நீ காய் பரிகிறாய் ....
நாட்டிடு நீயும் கன்று ...
உன் பேர்சொல்லி காய் பறிக்க


பார்வையால் பரிவு கொள்
வார்த்தையல் மருந்திடு
வாய்மைக்கு செவிகொடு
பிறர் வாழ்வுக்கு கைக்கொடு .....

அழகான வாழ்வு ஆனந்தமாகும் ......
அன்புடன் உமா ........

எழுதியவர் : உமா சங்கர் (26-Aug-14, 3:32 pm)
பார்வை : 168

மேலே