வைரமகளே

கள்ளமில்லா வெள்ளை
உள்ள சிரிப்பினில் எனை
கட்டிப்போட்டாயே அன்புடன்
அள்ளி தூக்கும் போது
எனை உதைத்திடும் உன்
பிஞ்சு பாதங்கள் அழகு
நடை பயில்வதை பார்த்திட
கண்களிரண்டும் இப்போதிருந்தே
ஏக்கம் கொள்கிறதே மண்ணில்
தவழும் நீ மடியில் கிடக்கும்போது
என் நெஞ்சம் நிறைந்திட்டதே
தாலாட்டு பாடுகிறேன் துயில்வாய்
தங்க மகளே தரணி தனில்
மின்ன வந்த வைரமகளே..

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:31 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 154

மேலே