எனது சந்தோசம் நீயே
உன்னை காணும்வரை
உறுதியாக இருந்தேன்
என் உயிர் என்னிடமே
பறிக்க ஓருயிரும் இல்லையென
என் எண்ணத்தில் மாற்றம்
உன்னைக் கண்ட நொடியினிலே
உயிர் இழந்த உடலானேன்
உன்னை நினைத்து என்னை
மறந்து உன்மத்தம் கொண்டேன்
கனவினிலும் என்னில் மாற்றம்
காண்பேன் என கருதவில்லை
என் நினைவினை நீ
பறிக்கும் வரை நீயின்றி
என் உயிர் வாழ்வதென்பது
இனி ஒருநாளும் இயலாது
என்ற நிலைக்கு கொண்டு
செல்ல எங்கிருந்து எனக்குள்
வந்தாய் இன்று என்
வாழ்வின் சந்தோசம்
நீயே என ஆனாய்..