தாய் நீதானடி
புன்னகையை கண்டவுடன்
காதல் வளர்ந்ததடி, உன்
விருபத்துடன் மணந்துகொண்டு
பிள்ளைபெற ஆசையடி.
வீட்டுக் குப்பைத்தொட்டிக்கு
கிறுக்கல் கடிதம் தீனியடி;
நேரில் பேச முடிவெடுத்து
ஒருமுறை துணிவு கொண்டேனடி.
மஞ்சள் வெயில் மாலையிலே
உனைக்காண பூங்கா வந்தேனடி;
புதுக்காதலனை அள்ளி அணைத்து
முத்தமிடுவதை கண்டேனடி.
கற்பனைக் கொஞ்சல் காதலெனில்
செந்தமிழ்மீது வந்ததடி;
இக்கவிதை என் பிள்ளையெனில்
ஈன்றெடுத்த தாய் நீதானடி!