எனக்காக பிறந்தவனே
![](https://eluthu.com/images/loading.gif)
கருவறையில்
நினைத்தாயா ?
தெரு ஓரத்தில் அவளை சந்திப்பாய் என்று
தெரு ஓரத்தில்
நினைத்தாயா ?
அவளை தேடி ஊர் முழுவதும் சுற்றுவாய் என்று
ஊர் முழுதும் சுற்றும் போது நினைத்தாயா ?
அவள் உன் ஊரிலே இருப்பாள் என்று
உன் ஊரில் நினைத்தாயா ?
அவள் உன் நினைவிலே இருப்பாள் என்று
அவள் நினைவிலே இருப்பாயா என்று நினைத்தபோது நினைத்தாயா ?
அவளும் உன் நினைப்பில் தான் இருக்கிறாள் என்று
அவள் உன் நினைப்பில் இருந்தபோது நினைத்தாயா ?
அவளிடம் காதலை சொல்வது என்று
காதல் சொல்லும் போது நினைத்தாயா ?
உன் காதலை அவள் ஏற்பாள் என்று
அவள் ஏற்றபொழுது நினைத்தாயா ?
உன்னுடன் அவள் வாழுவால் என்று
அவள் வாழும் போது நினைத்தாயா?
உன்னையே நேசிப்பால் என்று
உன்னை நேசித்தபோது நினைத்தாயா ?
உன் அருகிலே இருப்பாள் என்று
அருகிலே இருந்தபோது நினைத்தாயா ?
உன்னை அணைப்பாள் என்று
உன்னை அணைக்கும் போது நினைத்தாயா?
அவளை முதலில் தெருமுனையில் சந்தித்தது என்று
தெருமுனையில் சந்தித்தவளை கருவறையில் நினைத்தாயா ?
உனக்காக உயிர் விடுவாள் என்று
உனக்காக உயிர் விட்டவளை நினைத்தாயா ?
கல்லறையிலும் அவள் உறவு தொடரும் என்று
.........................................................................................................................................................................................