அசை போடுது மனம்
தண்ணீர் எடுக்க
வந்த கன்னி மனம்
எதை நினைத்து
கற்பனையில்
தவழுகின்றதோ...!!!
சிந்திக்கின்றது
தெப்பக்குளத்தில்
நீந்தும் மீன்கள்...!!!!
கன்னியின் இதழ்
மெதுவாகப் புன்னகை
புரியவே..!!!
இவள் யார் நினைவில்
இதழ் விரிக்கின்றாள்
யோசிக்கின்றது அல்லி
இதழ்கள்...!!!
இந்த மங்கை யார்
மார்வின் மேல்
எண்ணத்தைப்
படரவிட்டு அமர்ந்து
இருக்காள்...!!!
திகைத்துப் பார்க்கின்றது
நீரோடு உறவாடும்
தாமரை இலைகள்...!!!
அவள் கைகள் மெதுவாக
தண்ணீர் குடத்தை தடவ
ஆரம்பிக்கவே...!!!
ஏன் இன்று இவள்
என்னை ஆசையோடு
தடவுகின்றாள் தன்னை
மறந்து என்று குடம்
பெரும் ஆராச்சியில்
இறங்கியது...!!!
இவை எதுகும் புரியாமல்
அவள் அன்று நடந்த அந்த
இன்ப நினைவில் மிதக்கின்றாள்..!!