ஏனடி என்னை கொல்கிறாய்
நீ யாரடி பதில் சொல்லடி
கண்களால் களவு செய்கிறாய்
காரணம் சொல்ல மறுக்கிறாய்
காதல் என சொல்லியே
காரணமின்றி சிரிக்கிறாய்
தனிமையில் தவிக்க விடுகிறாய்
உன் நிழலாய் அலைய விடுகிறாய்
உன்னை ரசிப்பதும் நீ அறிகிறாய்
அறியாததுபோல் நடக்கிறாய்
எல்லாம் தெரிந்தும் நீ
ஏனடி என்னை கொல்கிறாய்
காதலை சொல்ல ஏன்
கால் ஜென்மம் ஏன் எடுக்கிறாய்