மனமெனும் பெருநதி
மனம் ஒரு பெருநதி.
அளக்கமுடியா
ஆழம் கொண்டது.
முக்குணமலையினில்
அஹங்காரச்சுனை பிறந்து
அநுபவ ஊற்றுக்கொண்டு
பெருக்கெடுத்தோடும்
பெருநதி.
விறுப்பு வெறுப்புக்
கரைகளினூடே
எண்ணவலைகள் மோத
வாழ்க்கை வயல்
வழியோடி
காலக்கடல் கலக்கிறது.
புலனறிவு மழை பெய்ய
சுனைச்சுரப்பு பெருகிவிட
ஆசைவெள்ளம் சீற்றெடுத்து
ஆங்கார மண்ணடித்து
வழி நாசமாகிறது
வயல் நாறிப்போகிறது.
மழைப்பிறப்பு அருகிடணும்
சுனைச்சுரப்பு சுருங்கிடணும்
புத்தியெனும் தடுப்பணையும்
கட்டிப் பராமரிக்க
வயலும் காத்திடலாம்
ஞானப்பயிர் வளர்த்திடலாம்
உண்மையுவகையுடன்
உழவுத்தொழில் செய்து
உண்டது போக
உலகுக்கும் கொடுத்திடலாம்.
வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.