தலைப்பூ மோத்தல் முதலியன ஆகாது - ஆசாரக் கோவை 90
தலைக்கிட்ட பூமோவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பிற் பார்ப்பார்கைக் கொள்ளாரே யென்றும்
புலைக்கெச்சில் நீட்டார் விடல். 90 ஆசாரக் கோவை
பொருளுரை:
பெரியோர் எப்பொழுதும் ஒருவர் தலையில் முடித்த பூவை தாம்
முகர்ந்து பார்க்க மாட்டார்.
முகர்ந்த பூவையும் தலையில் அணிய மாட்டார்.
பிராமணர் தானமாகப் பசுவினைக் கொடுத்தாலும் அதனை
வாங்கமாட்டார்.
தம்மினும் வசதி குறைந்த ஏழையர்க்கு எச்சிலுணவைக் கொடுக்க
மாட்டார். ஆதலால் இத்தகைய செயல்களை விட்டு விடுங்கள்..
கருத்துரை:
தலையில் முடித்த பூவை முகர்வதும், முகர்ந்த பூவைச் சூடுவதும்,
பிராமணரிடம் பசுக்கொடை பெறுவதும் கூடாது. தம்மினும் வசதி
குறைந்த ஏழையர்க்கு எச்சில் உணவைக் கொடுப்பதும் ஆகாது.
எனவே, இத்தகைய செயல்களை விட்டு விடுங்கள்..