தாகம்
உயிர் குடிக்கும் ஆழ்துளை கிணறுகள் ......
தொடர்கதை ஆகிப் போன நிகழ்வுகள்.
"கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில்,
நேற்றும் சங்கரன்கோவில் அருகே",
ஒரு வாரத்தில் மட்டும் மூன்று குழந்தைகள்,
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து....
வாழாமலே வாழ்க்கையை முடித்து கொண்டனர்..
யார் காரணம்???
பெற்றோர்களா?
முதலாளிகளா?
அரசா? அதிகாரிகளா ?
ஏதுமறியா குழந்தைகளா ?
இயற்கையா?
எதுவாக இருப்பினும்...
மற்றுமொரு நிகழ்வை இனி பொறுத்துக்கொள்ள முடியாது.
அரசு கடுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,
அதிகாரிகள் நடைமுறைபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
மீறுபவர்கள் மீது .....
சட்டம் கடுமை ஆக்கப்படவேண்டும் ...
'எழுத்து நண்பர்களாகிய' நாம்
வெறும் ஆழ்ந்த இரங்களொடு ,
நின்றுவிடாமல்...
குறைந்தபட்ச விழிப்புணர்வை - குறிப்பாக
கிராம மக்களிடமும்,
பள்ளிகுழந்தைகளிடமும் எடுத்துச்செல்வோம்.
தாகமெடுக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு
சாவுமணி அடிப்போம்.
Thaagamedukkum