அன்புள்ள நியந்தாவுக்கு 4

பெண் போலிஸ்......

உடல் நடுக்கத்தை விட கண்கள், நடுக்கத்தை அதிகம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது......
"இவுங்களுக்கு யார் தான் துணி தெய்ப்பதோ......"- உள்ளுக்குள் எறும்பொன்று ஊர்வதையும் தடுக்க முடியவில்லை....
உள்ளுக்குள் தெறித்த ரத்தம் என் மூளைக்குள் முற்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தது..... என்ன செய்வது...?.. என் திருட்டு முழி.... இன்னும் சற்று நேரத்தில் காட்டிக் கொடுத்து விடும்...... பார்த்துக் கொண்டே போன் பேசுவது போல நடிக்க முற்பட்டேன்.... வந்தது நடுக்கம் மட்டும் தான்....

சட்டென கழிவு நீர் தொட்டிக்குள் தலையைப் பிடித்து அழுத்தியது போல.... காதுக்குள் குபுக்கென்று மூச்சு திணறியது....

ஏண்டா... ..........**************************, **************,******,****************,******,,,,,,,,,,,***********.................*********
இங்க என்ன பண்ற...... ************ ************* மாரி....... முழிக்கற...... வாடா........*******......

பேசிக் கொண்டே இருந்த சீருடை......க்கு முன்னால் வாந்தி மட்டும் தான் என்னால் எடுக்க முடிந்தது....பயந்து கொண்டே அருகில் சென்றேன்....

என்னை உற்றுப் பார்த்தது சீருடை.... நானும் உற்றுப் பார்த்தேன்.... கண்கள் புத்தியைக் காட்டி விட்டது... பாளார் என விழுந்தது ஒரு அறை... எத்தனை வருட அனுபவம்.. பெண்ணாக... புரியாதா....! இருந்தாலும் நான் பெயர் பார்த்ததாக என்னை நானே சமாளித்துக் கொண்டேன்... அட என்ன ஒற்றுமை.... நியந்தாவை தேடும் என் கன்னத்தில் பதிந்த கைகளின் பெயர் சிந்தா......

சிந்தா ஜீப்பை ஓட்ட நான் பைக்கில் பின்னாலேயே போய் கொண்டிருந்தேன்...

"தப்பிச்சு போக முயற்சி பண்ணின....************* சுட்டு போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்...."-

சிந்தாவின் சிவப்பு வார்த்தைகள் புத்தியை சுட்டுக் கொண்டே இருக்க, நான் எதற்கு தப்பிக்க முயற்சி செய்வேன்.. பேசாமல் ஸ்டேஷன் போனதும் எல்லா விவரத்தையும் சொல்லி விட்டு வந்து விட வேண்டும்....

மூணு சின்ன பசங்க ஒரு ஆளை ஆட்டை அறுக்கற மாறி அறுக்கரானுங்க... அதை புடிக்க முடியல.. ஒரு போன் பண்ண வந்தவன அடிச்சு கூட்டிட்டு போறாங்க... இனி ஒரு அடி மேல விழுகட்டும்.. என்ன பண்றேன்னு பாரு.... மனதுக்குள் ஓட்டம் நடையாகி தவழத் தொடங்கியது...

நியந்தா மூக்குத்தி குத்தி இருந்தா.... அது இன்னும் அவள மெருகேத்திக் காட்டிருக்க வேண்டும்.... காட்டுக்குள்ள தொலைஞ்சு போன பட்டாம் பூச்சிய தேட்ற மாறி, அத்தன அழகா மின்னின மூக்குத்தி, வெளிச்சங்கள தேடிட்டே இருந்திருக்க வேண்டும்....நியந்தாவின் நினைவுகள் அந்த சூழ்நிலையிலும் என்னை விலக வில்லை..... கை விடுவதுமில்லை என்பது போல.... அவள் தொட்ட கை.. என்னை சுரண்டிக் கொண்டே இருந்தது.... மஞ்சள் பைக்... மயங்கிச் சரியும் சூரியனின் சிவப்பு கதிர்களை வாங்கி வீசிக் கொண்டிருந்தது....மாலை மசியும் பூவாக......

பேசாம என் போன்ல இருந்தே கூப்டு இருக்கலாம்...... அந்த சுவரொட்டி பேச்சக் கேட்டது தப்பா போச்சு... இப்ப போலிஸ், கொலை, கெட்ட வார்த்தை.... தேவையா.... எது எப்டியோ... நியந்தாவ கண்டு பிச்சே ஆகணும்.. அவள மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்றது.... ஆட்டை அறுக்கறவனுக்கு வேணா சுலபம்.... எனக்கு கஷ்டம்... ஏன்னா... நான் ஆடு.....

தலைய சிலுப்பி கொண்டு ஜீப்பின் பின்னால் போய்க் கொண்டே இருந்தேன்.... ஜீப் நின்றது....

இரவு 7............

கவிஜி

நியந்தா....வை பாக்கணும்....

எழுதியவர் : கவிஜி (29-Aug-14, 1:11 pm)
பார்வை : 129

மேலே