உன்னை மட்டும் நினைக்க வைத்தாய் உயிராக 555

என்னவளே...


நித்தம் உன்னை
நினைக்கவைத்தாய்...

என்னை மறக்க
வைத்தாய்...

என் கோபத்தை
மறக்க வைத்தாய்...

உன் கோபத்தை
ரசிக்க வைத்தாய்...

என் பார்வையை
திருடினாய்...

உன் பார்வையை
எனக்கு கொடுத்தாய்...

என் பெயரை மறக்க
வைத்தாய்...

உன் பெயரை மட்டுமே
ரசிக்க வைத்தாய்...

என் வாசத்தை
மறக்க வைத்தாய்...

உன் வாசத்தை
சுவாசிக்க வைத்தாய்...

என் மொழிகளை
மறக்க வைத்தாய்...

உன் வாய் மொழி மட்டுமே
உச்சரிக்க வைத்தாய்...

என் முகம் மறக்க
வைத்தாய்...

என்னில் உன் அழகை
பதிய வைத்தாய்...

என்னை முழுவதும்
மறந்துவிட்டேன்...

உன்னை மட்டுமே உயிராக
நினைக்க வைத்தாய்...

உயிரானவளே உன்னை
சுமக்கிறேன்...

என் இதயத்தில் நித்தம்...

நாளை நீ சுமக்க
வேண்டும்...

நான் சூடும் மணமாலையும்
மாங்கல்யமும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Aug-14, 9:39 pm)
பார்வை : 225

மேலே