நீ அனுப்பியது தென்றலா புயலா

நீ அனுப்பியது தென்றலா.? புயலா.?-வித்யா


என்.....
கன்னங்களில் வழியும்
கண்ணீர் உலர்த்த
தென்றலை பெரும்புயலென
நீ அனுப்பியது நினைவில் இல்லாமல் இல்லை......!

ஆயினும் அன்பே
நீ அனுப்பியது
தென்றலா..? புயலா..?
என்றொரு ஐயம்
எனக்கு......!!

##########################################################

நேற்று கனவில்
நிலா வந்ததாய் கூறினாய்.....
உண்மையில் என் மனம்
யாரந்த வெண்ணிலா
என்று கேட்டுக்கொண்டே இருந்தது........!!
#########################################################

நீ என்னழகை
வர்ணிக்கும் போதெல்லாம்
உன் பார்வையின் நீளம் அளப்பதிலேயே
என் மனம் மும்முரமாக இருக்கிறது.........!!

பாவம் நீ
வர்ணிக்கத் தெரியாதவனாகவே
இருந்திருக்கலாம்.....!!
########################################################

உனக்கு பிடித்தவைகளை எல்லாம்
பட்டியலிட்டாய்..........
அன்றிலிருந்து
உனக்கு பிடித்த எதுவும்
எனக்கு பிடிப்பதே இல்லை......!!

கோபத்தில்
"என்ன பொண்ணு டீ நீ" என்று
என்னிடம் கேட்டதைத் தவிர...!

########################################################
அதெல்லாம்
சரி....அதென்ன
உனக்கு பிடித்த எதுவும்
எனக்கு பிடிப்பதில்லை.....?

ஆம் உனக்கு பிடித்த எதுவும்
என்னை விட உன்னை அதிகம்
ஈர்த்துவிடக்கூடுமோ எனும் பயம் தான்.....!!

########################################################

எனை ஈர்க்க
நீ எடுக்கும் பெரும் சிரத்தைகள்
யாவும் பெருந்தோல்வியிலே முடிகின்றன
இயல்பாகவே இருந்துவிடு
ஒருவேளை உன்னியல்பு
எனை ஈர்த்து விடக்கூடும்.........!

இது என்னை ஈர்க்க
நானே உனக்கு
கொடுத்த டிப்ஸ்........

#########################################################

என் நண்பனை
பார்த்து ஏன் சிரித்தாய்
என்று.... பொறாமை மறைத்து
கோபத்தோடு கேட்டாய்..........
இன்னும் என் நினைவிலிருக்கிறது.......!

உன் நண்பனிடமே
"கேட்டுக்கோ" என்று
நான் கூறிய நொடியில்
உன் நண்பன்
துரோகியாகிவிட்டான் போலும்........!

மறுநாள்......
biscute போட்டவரை
நன்றியுடன் பார்க்கும் நாய் போல்
நான் கடக்கும் நேரம் பார்த்து
உன் நண்பனுக்கு நீ வைத்த முத்தம்
சகிக்கல..........!

############################################################







@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அவன் நண்பனை பார்த்து நான் சிரித்ததற்கு காரணம்.......

"என்ன பொண்ணு டீ நீ" நு உன்கிட்ட சொல்றான்.........
என்ன......பொண்ணு டா மச்சா அவ...... நு ஊரெல்லாம் சொல்றான்........
என்று இவன் காதலுக்கு அவன் நண்பன் அஸ்த்திவாரம் போட்டதால்.....!

காதலில் சொதப்பாதீங்க பாஸ்.........tuetion போங்க.

எழுதியவர் : (31-Aug-14, 3:13 pm)
பார்வை : 101

மேலே