குறை ஒன்றும் இல்லை
அமைதி நிறைந்த இல்லம் அழகு!
அசைந்தாடும் மரங்கள் அழகு!
ஆடம்பரம் இல்லா வாழ்வு அழகு!
ஆங்காங்கே விழுந்த பனித்துளி அழகு!
இறைக்க ஊரும் கேணி அழகு!
இரவில் தெரியும் சந்திரன் அழகு!
இளமையில் கற்கும் கல்வி அழகு!
உண்மை பேசும் உதடுகள் அழகு!
எதிர்ப்புகள் இல்லா நட்பு அழகு!
எதிரிகள் இல்லா வாழ்வு அழகு!
ஏழைக்கு இறங்கும் உள்ளம் அழகு!
சுட்டுவிடும் சூரியன் அழகு !
சொந்தங்கள் சூழ இருப்பது அழகு!
சோம்பல் இல்லா வாழ்வு அழகு !
கறைபடாத கைகள் அழகு !
போராடிப் பெற்ற வெற்றி அழகு!
தேனை சுமக்கும் மலர்கள் அழகு!
பயன்படுத்தும் மூளை அழகு!
மின்னித் திரியும் மின்மினி அழகு!
வெயிலுக்கு ஒதுங்கும் விருச்சம் அழகு!
சிசுவை சுமக்கும் கருவறை அழகு!
சிறகினை கோதும் பறவை அழகு!
முளைவிட்டு துளிர் விட்ட பயிர்கள் அழகு!
சலசலக்கும் ஓடை அழகு!
சங்கீத இசை அழகு!
வெட்கம் நிறைந்த பெண்மை அழகு!
வெடித்து சிரித்த முல்லை அழகு!
கரைந்து உண்ணும் கக்கை குணம் அழகு!
பார்ப்பதெல்லாம் அழகே!
பார்க்கும் முறையில்
குறைபாடு இல்லாமல் இருந்தால் !!!!
குறை ஒன்றும் இல்லை -இக்
குவலயத்தில் !