பழம் நீ அப்பா

சிறுமலைப் பழம்ஒரு சீப்பும்

பலாப்பழச் சுளைகள்

பத்துப்பன் னிரண்டும்

சிவந்த ஆப்பிள் ஐந்தாறும் தின்றபின்

மாம்பழம் இங்கே வரத்தில் லையோ

என்று கேட்டவாறு

இருமிக் கனைத்துப்

பாகவதர் கனிந்து

பாடத் தொடங்கினார்:

"பழம்நீ அப்பா பழம்நீ. . . "

அப்பன் முருகன் அலறி ஓடினான்

எழுதியவர் : கவிஞர் மீரா (2-Sep-14, 2:50 am)
பார்வை : 176

மேலே