உள்ளே வெளியே
உள்ளே வெளியே...
மூக்கணாங்கயிறு-
அறுத்தெரிய வேண்டும்.
முடிந்தால்
கொம்புகள் இரண்டல்ல
நான்கைந்து வேண்டும்!
தலையில் முடிகளுக்கு முழுக்கு.
முழுவதும் முடிந்தால் முட்களாய்
இருக்கலாம்.
இப்படியெல்லாம்,இவையெல்லாம்
இருந்தால் -
மனிதன் இல்லை என்று எவன் சொல்வது?
வெளித்தெரியாமல்
உள்ளேயே இருக்கும் இவை
வெளியே தெரிந்துதான் போகட்டுமே!
பயம் போகலாம்-அன்றி
வரலாம்
விலங்குகளுக்கு!
சிரித்துக்கொள்ளட்டும் அவை.
மனிதனின் உள்ளும் வெளியும்
ஒன்றுதான் என்று.