எட்டு திக்கும் பேசப்படுகிறதே

எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

என்னவனை
காண்பதும் பேசுவதும் ...
மிக அரிது அவனை
நெஞ்சில் சுமந்தே இன்பம்
காணுகிறேன் .......!!!

ஊரார்
பேச்சு கடும் பேச்சு ....
வாயில் வந்தபடி என் காதல்
உலாவுகிறதே ....
நிலவை பாம்பு பிடிப்பது
போல் - என் காதல் கதை
எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

திருக்குறள் : 1146
+
அலரறிவுறுத்தல்
+
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 66

எழுதியவர் : கே இனியவன் (3-Sep-14, 12:47 pm)
பார்வை : 121

மேலே