காதல் செடி வளர உதவுகிறார்கள்
காதல் செடி வளர உதவுகிறார்கள்
பேசுங்கள் பேசுங்கள் ...
நன்றாக பேசுங்கள் ....
ஊர் பெண்கள் சேர்ந்தால் ...
சும்மாவா விடுவீர்கள் ...?
ஊர் மக்களின் பேச்சும்...
என் தாயின் கடும் சொல்லும்...
என் காதலுக்கு உரமும்....
தண்ணீரும் போல் ...
இவர்களே என் காதல் செடி
தளர்த்து ஒங்க உதவுகிறார்கள் ....!!!
திருக்குறள் : 1147
+
அலரறிவுறுத்தல்
+
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 67