உறவாய் நீ
எழுதப்படாத என் பக்கங்களை எல்லாம்
நீ நிரப்பிப்போகிறாய்
உன்
புன்னகை அலங்கரித்த நேசத்தால்..........
எத்தனையோ வினாடிகள்
வீணடிந்திருக்கலாம்
என் வாழ்நாளில்....!!!
அத்தனையும் சேமித்து
ஒருநொடியில்
என் உள்ளங்கைக்குள்
கொடுத்தாய் - உன்
உயிர்மூச்சுக்காற்றால்....
உறவுகள் தேவையில்லை
என்றெண்ண தோன்றுதே
என் உலகமாய்
உன்னை விழிகொண்டு பார்த்தப்பிறகு........
ஊரடங்கு உத்தரவு உயிருக்குள்
இட்டபின்னும்
மீண்டுமொருமுறை மீறுதே
மிச்சமின்றி நீ கொண்ட
நேசத்தின் மொத்த காற்று................
கவிதாயினி நிலாபாரதி