இதயம் இல்லை

மௌனமாய் பார்க்காதே.,
சத்தமின்றி பாடாதே.,
கை கோர்த்து நடக்காதே.,
இதழ் பிரிக்காமல் சிரிக்காதே.,
கேளாமல் முத்தமிடாதே..,
எனக்காய் கண்ணீர் விடாதே.,

எத்தனை முறை நான் காதல் கொள்வது உன்னோடு...?

திரும்ப திரும்ப கொடுக்க என்னிடம் இதயம் பல இல்லை.., ஓன்றுதான்..,
அதையும் உன் முதல் பார்வையிலே, பறித்துகொண்டாயே..?

இனி என்னிடம் இதயம் இல்லை...!

எழுதியவர் : gowtham (3-Sep-14, 12:05 pm)
சேர்த்தது : கௌதமன்
Tanglish : ithayam illai
பார்வை : 77

மேலே