என் ஆசைகள்

-----------------------------------------------------------------
ஊர்ப்புறத்தின் ஒரு ஓரத்தில்
பயிர் விளையும் வயல் ஓரத்தில்
காலை எழுந்து கூழ் குடித்து
கருநிலத்தில் கால் பதித்து
காளை இழுக்கும் ஏர் பிடித்து
உயிர் கொடுக்கும் உழுநிலத்தை
உயர்வுணர்வோடு உழுதிட ஆசை......
-----------------------------------------------------------------
விஷ்ணுவின் சக்கரம் விலைக்கு வாங்கி
விரல் நடுவினில் அதனை தாங்கி
சக்கரம் சுழலும் செம்மையினால்
செம்மண்பானைகள் செய்திட ஆசை......
-----------------------------------------------------------------
காற்றினை அழைத்துச் சென்று
கண்காணாத இடத்தில் நின்று
காற்றின் கண்களைக்கட்டி அங்கு
கண்ணாமூச்சி ஆடிட ஆசை.....
-----------------------------------------------------------------
ஆழிக்கடலின் அடியில் சென்று
நீலதிமிங்கிலத்தின் தலையில் நின்று
ஆழியின் நீரின் மொத்த அளவை
அரை நொடியில் அளந்திட ஆசை......
-----------------------------------------------------------------

மங்கள்யான்யுடன் செய்வாய் சென்று
மனிதர்கள் வாழ வழியுண்டா என்று
ஆவலுடனே ஆராய்சி செய்து
ஆயிரம் அதிசியம் அறிந்திட ஆசை....
-----------------------------------------------------------------
ஆசை அகற்றிடு என்று சொன்ன
ஆசை புத்தனின் அருகில் சென்று
ஆசைகள்தான் வாழ்க்கை என்று
வம்பிற்கு இழுத்திட அதீத ஆசை......
-----------------------------------------------------------------

{ஆயரம் ஆசைகள் இன்னும் உள்ளது....... :-) }

எழுதியவர் : ஷர்மா (3-Sep-14, 5:43 pm)
Tanglish : en aasaikal
பார்வை : 335

மேலே