கனவில் இனிமையே
காற்றின் ஓசை காதில் இதமாய்
அருவி விழுந்து கண்களுக்கு
விருந்தளித்து சலசலவென
ஓடையாய் ஓடுகிறதே கானகத்தில்
உள்ள புள்ளிமான்களெல்லாம்
துள்ளி குதித்து வந்து நீர் பருகி
தாகம் நீங்கி செல்கிறதே
எங்கிருந்தோ பறந்து வந்த
கொக்குகள் தத்தி நடந்து
தண்ணீரில் மீனை தேடுகிறதே
பசுமை படர்ந்த கானகத்தில்
பார்க்கும் இடமெல்லாம்
இனிமையே மரங்களில்
உள்ள பறவைகளின் சப்தம்
மனதிற்கு அளிக்குது உற்சாகமே
கிர்ரென்று சத்தம் கடிகாரத்தில்
கண்விழித்துப் பார்த்தால்
அத்தனையும் கனவே ம் இனி வரும்
காலங்களில்கனவில்
மட்டுமாவது கண்டு
இன்பம் கொள்வோம்