கொண்டாட்டம்

வளைந்திருந்த வானவில்
நிறங்கள் ஏழினில்
கலைந்தது...
விரிந்தது வானம்
அழகிய நீலத்தில்
வருகை தந்தது
நிலவு வெள்ளை வண்ணத்தில்
சூழ்ந்தது முகில்கள்
கருமை நிறத்தினில்
பொழிந்தது பூமழை
பூமியில்
மகிழ்ச்சியில் சிரித்தது பூமி
பசுமையில்

வானத்தில்
வண்ணங்களின் கொண்டாட்டம்
பூமியில்
நெஞ்சங்களின் கொண்டாட்டம்.

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-14, 9:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kondaattam
பார்வை : 493

மேலே